தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

சாலையில் செல்லும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், சின்னஆண்டாங்கோவிலில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்வதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதினால் நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சின்னஆண்டாங்கோவில்.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

கரூர் மாவட்டம், கல்லடை ஊராட்சி, தோகைமலை-திருச்சி மெயின் ரோட்டில் கரையாம்பட்டி பிரிவு சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று அடிக்கும்போது இந்த மின்கம்பம் எளிதில் முறிந்து விடும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரையாம்பட்டி.

கலங்கலாக வரும் குடிநீர்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி சார்பில் குளித்தலை நகரப்பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் கலங்கிய நிலையில் வருகிறது. இந்த குடிநீரை பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தூய்மையான குடிநீர் வழங்க குளித்தலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குளித்தலை.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி முதல் தாதம்பட்டி வரையிலான தார் சாலை சேதம் அடைந்து மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ், தாதம்பட்டி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை பகுதியில் சபரீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழி என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ள இடத்தின் அருகில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிவிட்டு இந்த இடத்தில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெண்ணெய்மலை.


Next Story