தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

மது பிரியர்கள் அட்டூழியம்

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் வகையில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதுடன் காலி பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து அட்டூழியம் செய்துவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் காலை நேரத்தில் இந்த கடைக்கு வரும் பொதுமக்களின் கால்களில் கண்ணாடி துண்டுகள் குத்தி காயம் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செஞ்சேரி.

புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

புதர்மண்டிய வாரச்சந்தை

பெரம்பலூர் உழவர் சந்தை அருகே வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடந்து வருகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்மண்டி காணப்படும் இடத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமம் ஆண்டியான் குட்டை பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க பாய்கிறது. மேலும் கால்நடைகளை கடித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குரும்பலூர்.

கலங்கலாக வரும் குடிநீர்

பெரம்பலூர் பெருமாள் கோவில் தெரு பகுதியில் 2 வாரங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் குழாய்களில் வரும் குடிநீர் கலங்கலாக வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது ெதாடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.


Next Story