தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குடிநீர் இல்லாமல் அவதி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலக்கொல்லை பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் வெகுதூரம் சென்று பொதுமக்கள் குடிநீர் பிடித்து வருதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் தரைமட்ட நீர்தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தத்தனூர் மேலக்கொல்லை.

குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் உஞ்சினி அம்பேத்கர் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் இருப்பதால் கலங்கலாக குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், உஞ்சினி கிராமம்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஏந்தல் நடுத்தெரு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், உடையார்பாளையம்.


தூர்ந்துபோன வடிகால் வாய்க்கால்

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ராஜீவ் நகர் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலில் ஏராளமான கருவேல மரங்கள், செடி-கொடிகள் முளைத்து தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வாய்க்கால் வழியாக மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வாலாஜாநகரம்.


கடைவீதியில் சுற்றித்திரியும் பன்றிகள்

அரியலூர் மாவட்டம், செந்துறை கடைவீதியில் நாள்தோறும் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், கடைக்காரர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.


Next Story