தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
திறக்கப்படாத சமுதாய சுகாதார வளாகம்
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, கொடுந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கொடுந்துறையில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்ட இந்த சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரிய கொடுந்துறை.
கடிக்க வரும் தெருநாய்கள்
திருச்சி உறையூர் லிங்கா நகர் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்லும் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் தினேஷ்,
தினேஷ், லிங்காநகர்.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சியில் இருந்து கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு இடையேயான சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கூத்தைப்பார்.
குரங்குகள் தொல்லை
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம், வளையெடுப்பு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, தின்பண்ட பொருட்கள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த குரங்குகளை பிடிக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வளையெடுப்பு.
எலும்பு கூடான மின்கம்பங்கள்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மூவானூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 6 மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் எலும்பு கூடுபோல் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கந்தசாமி, மூவானூர்.