தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத மின்விளக்குகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் 4 மின்கம்பங்கள் உள்ளது. இதில் ஒன்றும் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியா மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.
ஆபத்தான குடிநீர் தொட்டி
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் சாத்தனப்பட்டு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் தொட்யை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் தொட்டி கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், சாத்தனப்பட்டு
வடிகால் வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் உள்ள கிழக்கு மற்றும் வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுப்பாளையம்.
நாய்கள் தொல்லை
அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், தா.பழூர்.
பஸ் வசதி வேண்டும்
அரியலூரில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, புதுச்சேரி, வேளாங்கண்ணி, மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், ஓசூர், ஈரோடு, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு செல்வதற்கு நேரடியாக பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் சென்று மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் நேர விரயமும், அதிகப்படியான செலவு ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரியலூரில் இருந்து நேரடியாக மேற்கண்ட ஊர்களுக்கு பஸ் வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக கொள்கிறோம்.
குமரன், அரியலூர்