தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

மது பிரியர்களால் தொந்தரவு

பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பெரிய ஏரிக்கரையில் இரவு நேரத்தில் மது பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடிக்கின்றனர். மேலும் அவர்கள் குடி போதையில் சாலையில் செல்பவர்களிடம் தொந்தரவில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த சாலை வழியாக தனியாக பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே ஏரி கரை பகுதியில் யாரும் மது குடிக்க விடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் இலப்பை குடிக்காடு பேரூராட்சி கிழக்கு தெற்கு தெரு பிஸ்மில்லா நகர் 2-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

குளங்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தை சுற்றி சிவகங்கை குளம், நல்லதண்ணீர் குளம், அம்மா குளம், செவன்டா குளம் என 4 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் பராமரிப்பு இல்லாமல் கருமேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து செய்து உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் காரியனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் 11 மற்றும் 12-ம் வகுப்புகளை கை.களத்தூர் மற்றும் வேப்பந்தட்டை, பெரம்பலூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதனால் அவர்கள் தினமும் அவர்கள் பள்ளிக்கு செல்ல வர காலை மற்றும் மாலை நேரத்தில் பெரம்பலூரில் இருந்து காரியானூருக்கு கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், காரியனூர்.

தெரு விளக்குகள் எரிவதில்லை

பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே ஆலம்பாடி ரோட்டில் தெரு விளக்குகளில் எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலம்பாடி ரோட்டில் தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்


Next Story