தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

வேகத்தடை வேண்டும்

பெரம்பலூர் நகரப்பகுதியில் உள்ள வெங்கடேசபுரத்தில் சாலையில் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாக செல்கிறது. இதனால் இப்பகுதியில் தினமும் 3-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்கவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, பெரம்பலூர்

விபத்தை ஏற்படுத்தும் சாலை

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி காமராஜர் வளைவு வரை உள்ள தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது, இதனால் இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வகையான வாகனங்களும் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது, மேலும் மழைக் காலங்களில் குழிகள் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து அவ்வபோது விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சத்தியசீலன், பெரம்பலூர்.

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூடலூர் ஊராட்சி, இலுப்பைகுடி கிராமத்தில் உள்ள தெற்கு குடியிருப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் அதிகளவில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷ சந்துகள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

கண்ணன், பெரம்பலூர்.

குறைவாக வரும் மின்சாரம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுகுறிச்சி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குறைவான மின்சாரம் வருவதால் அடிக்கடி வீடுகளில் மின்சாத பொருட்கள் பழுதாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுகுறிச்சி.


Next Story