தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

தெரு நாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம் வட்டம் எளம்பலூர் சமத்துவபுரம் கிராமத்தில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் சாலையில் செல்வோர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் சிறுவர்களை துரத்தி, அவர்கள் கையில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி விடுகிறது. இதனால் அந்தப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடனையே காணப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

சுமதிசூரியகாந்த், சமத்துவபுரம்.

பயன்படுத்தப்படாமல் உள்ள கூடாரம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கால கட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்காக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கூட்டம் நடத்தும் வகையில் கூடாரம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கூடாரம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே காணப்படுகிறது. இதனால் அந்த கூடாரம் தற்போது விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே அந்த கூடாரத்தை கண்காட்சி, சிறப்பு முகாம்கள் நடத்த பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சட்ட விரோதமாக மது விற்பனை

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் காலையில் வேலைக்கு செல்ல தயாராக இருக்கும் ஆண்களில் சிலர் மது வாங்கி குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிகின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

கூடுதல் மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் இரவு நேரத்தில் செல்வதற்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய போதுமான மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.


Next Story