தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளகாநத்தம், கொளத்தூர் , பாடாலூர் ஆலத்தூர் கேட் ஆகிய 4 இடங்களில் தினமும் காலை முதல் இரவு வரை 24 மணி நேரமும் தடையில்லாமல் மது விற்பனை நடைபெறுகிறது. இதனால் வாலிபர்கள் பலர் காலை நேரங்களில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரிடம் சண்டை போட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கொளகாநத்தம்.

கூடுதல் மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் இரவு நேரத்தில் செல்வதற்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய போதுமான மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் டவுன் பகுதியில் உள்ள ரோவர் பள்ளி ஆர்ச் பகுதியில் இருந்து எளம்பலூர் வரையுள்ள சாலையில், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டைகளில் ஆங்காங்கே இளைஞர்கள் இரவு நேரத்தில் கூட்டாக அமர்ந்து கொள்கின்றனர். மேலும் அவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சாலையோரம் நிறுத்துவதினால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனை பெரம்பலூர் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், பெரம்பலூர்.

குளங்களை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தை சுற்றி சிவகங்கை குளம், நல்லதண்ணீர் குளம், அம்மா குளம், செவன்டா குளம் என 4 குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் பராமரிப்பு இல்லாமல் கருமேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்து செய்து உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.


Next Story