தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையின் நடுவே ஆபத்தான மின்கம்பங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி 8-வது வார்டில் குட்டையன் செட்டி தெரு பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் ஊன்றப்பட்டுள்ளது . தற்போது சாலை அகலப்படுத்தியும் எந்த வாகனங்களும் செல்ல முடியாதபடி சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளது . இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரிமளம்.
வண்டல் மண் எடுக்க அனுமதி வேண்டும்
புதுகோட்டை மேற்கு பகுதியை சேர்ந்த பெரும்பாலன மக்கள் செங்கல் சூலை தொழிலை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி கிடைக்காததால் செங்கல் தொழில் முற்றிலும் பாதிக்கபடுகிறது. இதனால் செங்கல் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ராஜ்குமார், புதுக்கோட்டை.
பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை தேவை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பஸ் நிலையத்திற்கு தினமும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளர்கள் காலை நேரங்களில் வருகின்றனர். பின்னர் இங்கிருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் பெரும்பாலான அரசு பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் சென்று வருகிறது. ஒரு சில தனியார் பஸ்களே வந்து செல்கிறது. இதனால் மணிகணக்கில் காத்து கிடக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆலங்குடி.
நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம். திருவேங்கைவாசல் பஞ்சாயத்து, செல்லுகுடி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் புத்தகங்கள் மற்றும் செய்திதாள்கள், எழுத்து தேர்வுக்கு படிக்க வெகுதூரம் சென்று வர வேண்டியது உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அன்னவாசல்.
சேதமடைந்த மின் ஒயர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பட்டி கிராமம் கூத்தகுடி விநாயகர் கோவில் பின்புறமாக செல்லும் மின் ஒயர்கள் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின் வினியோகம் தடைப்படுகிறது. மேலும் சில நேரங்களில் குறைவான மின்சாரம் வருவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைந்த வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கூத்தகுடி.