தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை நிலாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முறையான சாக்கடை வசதி இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான சாலை வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

முருகன், தாந்தோணிமலை.

குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய கோரிக்கை

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பஞ்சாயத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் நலன் கருதி மேல்நிலை நீர்தேக்க குடிநீர் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாததால் குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும் அப்பகுதியில் மரக்கிளைகளில் இருந்து இலைகள் உறிர்ந்து குடிநீர் தொட்டியில் விழுந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராஜா, தவிட்டுப்பாளையம்.

தெருவிளக்குகள் வேண்டும்

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் இனுங்கூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் மயானத்திற்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இனுங்கூர்.

சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள தவிட்டுப்பாளையம் 4-வதுவார்ட்டில் சிமெண்டு சாலை ஒன்று பல இடங்களில் சேதமடைந்தது. இதையடுத்து சிமெண்டு சாலை முழுவதும் உடைக்கப்பட்டு புதிய சாலை போடுவதற்கான பணி தொடங்கப்பட்டது. அந்த பணி பாதிலேயே அப்படியே போட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் முதியவர்கள், பொதுமக்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய சிமெண்டு சாலை போடும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வேலாயுதம்பாளையம்.


Next Story