தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
காட்சி பொருளாக மாறிய குடிநீர் தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சி, மணத்தொண்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி கடந்த ஓராண்டாக பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மணத்தொண்டி.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மாத்தூர் மற்றும் அதனை ஒட்டிய குமாரமங்கலம் ஊராட்சி பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சளி, காய்ச்சல், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கும், கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைக்கும் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மண்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுவர வேண்டி உள்ளது. அதனால் முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மாத்தூர்.
அரசு கோழி பண்ணை மீண்டும் செயல்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு செயல்பட்டு வந்தது. தற்போது கோழிப்பண்ணை புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகமாக நடந்து வருகிறது. எனவே அந்த கோழிப்பண்ணையை மீண்டும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
நிழற்குடையை சரிசெய்ய கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், நத்தம் பண்ணை ஊராட்சிக்குட்பட்ட அரசு ஐ,ஐ,டி. அருகே பயணிகள் நிழற்குடை ஒன்று இருந்தது. இந்த நிழற்குடை சாலை விரிவாக்க பணியின்போது சாய்ந்து விழுந்தது. இதனால் பயணிகள், பொதுமக்கள் வெயில் மற்றும் மழையில் நனைந்து அவதி பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தீபாபிரபு, நத்தம் பண்ணை.
ஊர்பெயர் பலகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதியில் சாலை ஓரங்களில் ஊர்பெயரை குறிக்கும் வகையில் ஆங்காங்கே ஊர் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த பலகைகளில் அனைத்தும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.