தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

பள்ளி சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள காம்பவுண்ட் சுவற்றில் சினிமா சுவரொட்டிகள் மற்றும் கண்ணீர் அஞ்சலி, அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட வாழ்த்து சுவரொட்டிகள் நிறைந்து பார்க்கவே மோசமாக காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரனூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

புதுக்கோட்டை கணேஷ்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனை பன்றிகள் கிளறி வருகின்றன. மேலும் துர்நாற்றம் வீசுவதால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஏம்பல் கிராமத்தில் பகல், இரவு நேரங்களில் தெருபகுதிகளில் ஆங்காங்கே தெரு நாய்கள் சுற்றிதிரிகிறது. இந்தநாய்கள் தெருவில் நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், முதியவர்களை கடிக்க வருகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தி செல்கிற. இதனால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஏம்பல்.

பயபாடின்றி கிடக்கும் குடியிருப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மெயின் ரோட்டில் வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு நீண்ட காலமாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. தற்போது குடியிருப்பு புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.

மின்கம்பங்களை மாற்ற கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் புதுக்கோட்டை-ஆலங்குடி மெயின் சாலையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த இந்த அலுவலகத்திற்கு அருகே மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.


Next Story