தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

சாலையின் குறுக்கே சாய்ந்து கிடக்கும் ஆலமரம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் உள்ள ஏரியின் தெற்கு பகுதி கரையில் இருந்த ஆலமரம் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி வீசிய சூறைக்காற்றில் வேரோடு கரையில் உள்ள பாதையின் குறுக்கே சாய்ந்தது. இன்று வரை அந்த மரம் அகற்றப்படாத காரணத்தினால் அந்த ஏரியின் கரையில் உள்ள பாதை வழியாக தெற்கு பகுதியில் உள்ள காடுகளுக்குச் செல்லும் கால்நடைகள், வாகனங்கள் , பொதுமக்கள் என அனைவரும் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்றி பாதையை மீண்டும் பயன்படுத்த உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பேரளி.

குப்பைகள் முறையாக அள்ளப்படுமா?

பெரம்பலூர் புறநகரப்பகுதியான துறைமங்கலம் 7 மற்றும் 9-வது வார்களில் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதால் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தண்ணீர் வசதி வேண்டும்

பெரம்பலூர் சங்குப்பேட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் அங்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவபவர்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சமுதாய கூடத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சங்குபேட்டை.

தேங்கி நிற்கும் மழைநீர்

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு முறையான சாலை வசதி இல்லாமல் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், சிறுவாச்சூர்.

வடிகால் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் தற்போது பெய்துவரும் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சீனு, டி.களத்தூர்.


Next Story