தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாலை வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஆதிச்சனூர் பஞ்சாயத்திற்குட்பட்ட நாச்சியார்பேட்டை கிராமம் கீழத்தெருவிற்கு கிழக்கே மயானம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் மயானத்திற்கு செல்லவதற்கு சாலை வசதி இல்லாததால் அந்த வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லபவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், நாச்சியார்பேட்டை

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம் , நாகமங்கலம் ஊராட்சி அண்ணாநகர் தெருவில் உள்ள நான்கு வீதிகளிலும் கழிவு நீர் செல்லும் கால்வாய் சுமார் 3 மாதமாக சுத்தம் செய்ய பட வில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜீவ்காந்தி, நாகமங்கலம்.

குரங்குகள் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி ஊராட்சி ஆ.சோழங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குரங்கள் சுற்றிதிரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்தும் உணவு மற்றும் திண்பண்டங்களை தூக்கி சென்று வருகிறது. மேலும் வீடுகளின் மேற்கூறைகளை பிரித்து நாசமாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடியாக குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சக்திவேல், ஆ.சோழங்குறிச்சி.

தேங்கி நிற்கும் மழைநீர்

அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சி ஊராட்சி 1-வது வார்டு காலனி தெருவில் ஏரானமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்கு பல ஆண்டுகளாக வடிகால் வசதி இல்லாமல் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் தவளை, விஷபூச்சிகள், பாம்புகள் தினமும் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஏலாக்குறிச்சி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி மீன்சுருட்டியில் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் தெற்கு பகுதியில் ஒரு மாயமானம் உள்ளது. இந்த மயானத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மயமானத்தில் போதிய இட வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மகாராஜ், மீன்சுருட்டி.


Next Story