தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தார் சாலை வேண்டும்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், தொப்பம்பட்டி கிராமம் ஆளிபட்டியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலை மிக மிக மோசமான நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாண்டியன், ஆளிபட்டி

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் வட்டம், பெருகமணி கிராம அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெருகமணி கிராமப் பஞ்சாயத்துக்கு சொந்தமான சிமெண்டு சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் இந்த சாலை வழியாக அரசு ஆரம்ப சுகாதார மையம், காவிரி ஆறு மற்றும் இடுகாட்டுக்கு செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெருகமணி

குடிநீர் குழாயில் உடைப்பு

திருச்சி ரெயில் நிலையம் எதிர்புறம் உள்ள முருகன் கோவில் அருகே தார் சாலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக இரவு, பகல் என எந்நேரமும் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு போதுமான குடிநீர் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் செல்லும் குழந்தைகளை தெருநாய்கள் கடிக்க வருகிறது. இதனால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சிறுகாம்பூர்.

சேறும், சகதியுமாக மாறிய தெருக்கள்

திருச்சி கே.கே. நகர் அய்யப்பநகர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது தெருக்கள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளித்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையால் தெருக்கள் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதில், குறிப்பாக காந்தி தெரு, பிள்ளையார் கோவில் சந்திப்பு, ராஜாஜி தெரு, வியாசர் தெரு, மணிகண்டன் தெரு உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.கே.நகர்


Next Story