தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

பயணியர் நிழற்குடை வேண்டும்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் ஏ.வி.எம். கார்னர் முக்கியமான பகுதியாகும். கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்களும், திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் பஸ்களும் அரவக்குறிச்சியில் ஏ.வி.எம். கார்னர் பகுதி தான் பிரதான பஸ் நிறுத்தம் ஆகும். அரவக்குறிச்சிக்கு தினமும் ஏராளமானோர் அலுவலக விஷயமாக வந்து செல்கின்றனர். அதேபோன்று இங்கிருந்து தினமும் அதிகமானோர் வேலை விஷயமாக வெளியூர்களுக்கு செல்கிறார்கள். பயணியர் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் ரோட்டு பகுதியிலேயே பஸ்சுக்காக வெயிலில் காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.

குடிநீர் தொட்டி கட்டப்படுமா?

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் தவிட்டுப்பாளையம் கிராமத்தில் காங்கிரட் சாலையின் நடுவில் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டி நடு ரோட்டில் கட்டப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூராக ஏற்பட்து. எனவே புதிய மேல்நிலை நீர்தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

ெபாதுமக்கள், நன்செய் புகழூர்.

சாலையில் நிறுத்தம் லாரிகளால் ஆபத்து

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் புகழூர் தமிழ்நாடு காகித ஆலை உள்ளது. காகித ஆலைக்கு செல்லும் சாலையில் பல்வேறு மூலப்பொருட்களை கொண்டு வரும் லாரிகளும் பேப்பர் ரோல்களை கேட்டுச் செல்வதற்காக வந்த லாரிகளும் என ஏராளமான லாரிகள் அணிவித்து நிற்கின்றன. அந்த நிறுத்தப்படும் லாரிகள் சாலையில் வரும் வாகனங்களை பார்க்காமல் திடீரென எடுத்து விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் காகித ஆலைக்குசெல்ல முன்னாள் சென்று கொண்டிருக்கும் லாரிகள் பின்னால் வரும் வாகனங்களை பார்க்காமல் திடீரென வலது புறமாக லாரிகளை திருப்புவதால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு முன் அங்கு அமர்ந்து இருந்த நபர் தெரியாமல் லாரி டிரைவர் லாரியை எடுத்ததில் உடல் நசுங்கி உயிர் பலி ஏற்பட்டது. இருபுறங்களிலும் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் பள்ளி ,கல்லூரி செல்லும் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர் .எனவே ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை அகற்றி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என பெயர் பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புன்னம் சத்திரம்

குழிகளை சீரமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து நடையனூர் செல்லும் தார் சாலை நெடுகிலும் பெரிய, பெரிய குழியாக உள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகனங்களின் டயர்கள் குழியில் பட்டு பஞ்சர் ஆகி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நடையனூர்.

கால்வாயில் முளைத்துள்ள செடி-கொடிகளை அகற்ற வலியுறுத்தல் 9442863512

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி ஒரம்புப்பாளையம் பகுதியில் தொடங்கி கவுண்டன்புதூர், செட்டி தோட்டம்,செல்வநகர், முத்தனூர் வழியாக சென்று முத்தனூர் வழியாக செல்லும் புகழூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டது.இந்நிலையில் ஒரம்புப்பாளையம் முதல் முத்தனூர் வரை உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த உபரி நீர் கால்வாய் வழியாக சென்று புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. அதேபோல் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்து இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இதனால் கால்வாய் நெடுகிலும் அவ்வப்போது ஏராளமான செடி-கொடிகள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் இந்த கால்வாய் வழியாக வரும் விவசாய உபரிநீரும், மழை நீரும் தங்குதடையின்றி செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் அதிக மழை பெய்து வரும் சூழலில் இந்த வழியாக மழை நீர் செல்ல முடியாமல் உபரி நீர் கால்வாய் அருகே உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வருகிறது .இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு, சிரமப்பட்டு வருகின்றனர் . இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஒரம்புப்பாளையம்.


Next Story