தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான மரம்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் காலனி, அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. இதன் கிளைகள் வளர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,அண்ணாநகர்,

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து தாயனூர் வரை சாலை குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லவே சாலை மிகவும் மோசமாக உள்ள. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், இனுங்கூர்

பஸ் நிறுத்தம் வேண்டும்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பாரதி நகரில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வேலைக்காக கரூர் அருகில் உள்ள ஜவுளி பூங்காவிற்கும், கரூரில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். பாரதி நகரில் இதுவரை பஸ் நிறுத்தம் கிடையாது. மாலை வேலை முடிந்து செல்பவர்கள் மலைக்கோவிலூரில் இறங்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள பாரதி நகருக்கு நடந்தே தான் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பாரதி நகரில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பார்த்திபன்,பொதுமக்கள்.

மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

கரூர் மாவட்டம், அரசு காலனி, கரிகாலி நகர் 3-வது மெயின் தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்வே பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

சக்திவேல், கரிகாலி நகர்

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் மாவட்டம், அரசு காலனி வசந்தம் நகர் அருகில் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்வகுமார், வசந்தம் நகர்.


Next Story