தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

புதிய பாடப்பிரிவுகள் தேவை

சிவகங்கை மாவட்டம் முக்கையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அறிவியல் பிரிவு மட்டும் உள்ளது. கலைப்பிரிவு இதுநாள் வரை இல்லை. இதனால் கலைப்பிரிவு பாடத்தை தேர்ந்தெடுக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே வரும் கல்வியாண்டில் 11-ம் வகுப்பில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடப்பிரிவுகளை தொடங்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொக்கலிங்கம், முக்கையூர்.

ஆபத்தான மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சாளக்குளம் அம்மன் கோவில் தெருவில் மின்கம்பம் ஆபத்தான நிலையில் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின்கம்பம் கீழே விழுந்து மின்விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வைசாலிஹர்சன், கீழச்சாளக்குளம்.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் ஆனைகுழாய் தெருபகுதி, அன்னை சிவகாமி புரம், ஆத்துப்பாலம் ஆகிய கவுசிகமா நதி கரையோர பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக உள்ளது. இது நீர் வளத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அதன் தூய்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே நதிகரையில் குவிந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சாமுவேல், விருதுநகர்.

போக்குவரத்து இடையூறு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிலும் குறிப்பாக செக்காலை நூறடிரோடு காலை மற்றும் மாைல நேரங்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்கின்றன. இவ்வாறு செல்லும் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திக்ெகாண்டு செல்வதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவீன், காரைக்குடி.

நாய்கள் தொல்லை

மதுரை மாவட்டம் திருமங்கலம் சேவரக்கோட்டை கிராமத்தில் நாய்கள் அதிக எண்ணிக்கையில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்கள், வாகனஓட்டிகளை துரத்தி கடித்து அச்சுறுத்தி வருகின்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தொல்லைதரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரன், திருமங்கலம்.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீரை மக்கள் காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் தண்ணீரின்றி அவதியடைகின்றனர். எனவே இந்த பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், ராமநாதபுரம்.

ஆக்கிரமிப்பு

மதுரை மாநகர் கீழமாசிவீதியில் ஏராளமான வாகனஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ஒருசிலர் கார், இருசக்கர வாகனங்களை சாலையை ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுவது மட்டுமல்லாது, போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் வாகனங்களின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தி சீரான போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மோகன், மதுரை.

தேங்கி கிடக்கும் குப்பை

விருதுநகர் மாவட்டம் அன்னை சிவகாமிபுரம் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளது. தேங்கிய குப்பையிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய்களால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே தேங்கிய குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிகுமார், விருதுநகர்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் பீ.பீ. குளம் பகுதியில் பஸ் நிறுத்தம் எதிர்புறம் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. மேலும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிர், மதுரை.


Next Story