தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே மின்னமலைப்பட்டி ஊராட்சி திருவாழ்ந்தூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டியானது கடந்த சிலநாட்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது. மாற்று ஏற்பாடாக அப்பகுதி போா்வெல்லில் இருந்து மோட்டார் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாத நேரங்களில் இந்த நீரும் கிைடக்காத நிலை உள்ளது. இதனால் குடிநீர் சரிவர கிடைக்காமல் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அதிகாரிகள் இப்பகுதியில் புதிய குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லியோன், எஸ்.புதூர்.

ஆபத்தான மின்கம்பம்

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை மெயின் பஜாரில் தினமும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பமானது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்புகம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. அப்பகுதியை பொதுமக்கள், வாகனஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

சாந்தமூர்த்தி, கேணிக்கரை.

நடவடிக்கை தேவை

மதுரை பரவை பகுதியில் உள்ள ஏ.ஐ.பி.இ.ஏ. காலனி ஏ, மற்றும் பி ஆகிய 2 குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு அந்த பகுதிகளில் வரும் லாரிகளால் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ேபரூராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஏ.ஐ.பி.இ.ஏ. காலனி, பொதுமக்கள்.

சுகாதார சீர்கேடு

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் ஆர்.சி. தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. இறைச்சி கழிவு மற்றும் சுத்தம் செய்த கழிவுநீர் ஆகியவை அப்பகுதியில் உள்ள சாலைகளிலே கொட்டப்படுகிறது. கொட்டப்பட்ட கழிவுநீரானது சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசி அப்பகுதியின் சுகாதாரத்தை சீர்கெடுக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

ரஞ்சித், மதுரை.

தரமற்ற குடிநீர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதி முழுவதும் சேறு, மண் மற்றும் கழிவுநீர் கலந்து தரமற்ற முறையில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள சிரமப்படுகிறார்கள். மேலும் குழந்தைகள் இந்த நீரை குடிப்பதால் காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். அதிகாரிகள் இப்பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சஞ்சய், சாத்தூர்.

பணி முடிக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் மேலக்கடம்பங்குடி-சாத்தரசன்கோட்டை சாலை விரிவாக்க பாரமரிப்பு பணிகளுக்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்களால் வாகனஓட்டிகள் வாகனங்களை இயக்கமுடியாமல் சிரமப்படுகிறார்கள். சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ள இந்தச்சாலையில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சாலைபணியை விரைந்து முடிக்க வேண்டும்.

சபரி, சாத்தரசன்கோட்டை.

உயர்கோபுர விளக்கு வேண்டும்

மதுரை மாவட்டம் அய்யர் பங்களா சாலையில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் இப்பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், திருப்பாலை மற்றும் உச்சபரம்புமேடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்துதான் செல்லும். இந்நிலையில் இந்த பகுதியில் உயர்கோபுர விளக்கு இல்லை. இதனால் இப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள், வாகனஓட்டிகள் இரவுநேரங்களில் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். ெபரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இந்த சாலைசந்திப்பில் உயர்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.

ஆறுமுகநயினார், அய்யர் பங்களா.

அடிப்படை வசதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், தார்ச்சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாம்ராட், சங்கராபுரம்.

குண்டும், குழியுமான சாலை

மதுரை மாவட்டம் பழைய குயவர்பாளையம் சாலையில் பள்ளிகள், பொதுத்துறை மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன. எப்போதும் நொிசல் மிகுந்த இந்தச்சாலையில் தினமும் எண்ணற்ற வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த சாலையானது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். மேலும் பள்ளி மாணவர்கள் நேரதாமத்தால் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மனோ, குயவர்பாளையம்.

ஒளிராத தெருவிளக்குகள்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி 13-வது வார்டு எம்.ஜி.ஆர். நகர், தர்கா கால்நடை ெதரு ஆகிய பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்தது. இதனால் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளதால் இந்தப்பகுதி சாலைகளை இரவில் கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் பழுதடைந்த தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிய விளக்குகள் பொருத்த வேண்டும்.

பாத்திமா பீவி, தொண்டி.

சேதமடைந்த பாலம்

விருதுநகர் அய்யனார் நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.இந்நிலையில் பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் ேபான்ற குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கொட்டப்படுகிறது. கொட்டப்படும் குப்பைகளானது தேங்கி கால்வாயில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளது. தேங்கிய கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரத்தை சீர்கெடுகிறது. மேலும் இந்த கழிவுநீர் செல்லும் கால்வாய் பாலமும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கிய குப்பைகளை அகற்றி கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும்.

சிவசூர்யா, விருதுநகர்.


Next Story