'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த கட்டிடம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழச்சொரிக்குளம் கிராமத்தில் ஊராட்சிமன்ற கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் தற்போது பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ளது. எனவே ஊராட்சிமன்ற கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்்ரம், கீழச்சொரிக்குளம்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அம்மாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதோடு, குப்பைகளால் சூழ்ந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. எனவே சுற்றுச்சுவரை சரிசெய்து குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பரமராஜ், சாத்தூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகர் 15-வது தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கின்றது. இதனால் சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து கழிவுநீர் சாலையில் தேங்குவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
முருகன், ராமநாதபுரம்.
நாய்கள் தொல்லை
மதுரை அவனியாபுரம் முல்லை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகனஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றது. இதனால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகண்டன், அவனியாபுரம்.
அடிப்படை வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் வெள்ளையாபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சாலை, கழிப்பிடம், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதியின்றி சிரமப்படுகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் அடிப்படை வசதிகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவன், அருப்புக்கோட்டை.
எரியாத தெருவிளக்கு
மதுரை அவனியாபுரம் செம்பூரணி சாலையில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இன்றி சாலை இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமுருகன், மதுரை.
குண்டும், குழியுமான சாலை
சிவகங்கை மாவட்டம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, சிவகங்கை.
சாலை வசதி தேவை
மதுரை மாவட்டம் சந்தோஷ்நகர், சூர்யாநகர் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றது. மேலும் மழை காலங்களில் சாலை சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாமிநாதன், மதுரை.