'தினத்தந்தி' செய்தி எதிரொலி; கம்பைநல்லூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி; கம்பைநல்லூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி சீரமைப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர், அம்பேத்கர் நகர், சனத்குமார் நதி உள்பட 6 இடங்களில் ரூ.18 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் குறுக்கே சுத்திகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டன. இந்த தொட்டிகள் முறையாக கட்டப்படாததால் அவற்றின் அருகே கழிவுநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து கடந்த 30-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் பொதுமக்கள் பேட்டியுடன் செய்தி கட்டுரை வெளியானது.

இந்த செய்தி எதிரொலியாக கம்பைநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகதீசன், தலைவர் வடமலை முருகன், துணைத்தலைவர் மதியழகன், கவுன்சிலர் சரவணன் ஆகியோர் கழிவுநீர் தொட்டிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் கழிவுநீர் தொட்டிகள் அருகே தேங்கி நின்ற தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் செல்லும் வகையில் தொட்டிகள் இடித்து, சீரமைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் செய்தி பிரசுரித்து உதவிய 'தினத்தந்தி' நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story