பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் பகுதி
முட்செடிகள் அகற்றப்படுமா?
அந்தியூரில் இருந்து சந்தியபாளையம் செல்லும் ரோட்டின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக முட்செடிகள் மற்றும் பல்வேறு செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் அந்த ரோட்டின் வழியாக செல்லும் வாகனங்கள் மீது முட்செடிகள் படுகின்றன. மேலும் வாகன ஓட்டிகள் மீதும் முட்ெசடிகள் படுவதால் அவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. எனவே ரோட்டின் இருபுறங்களிலும் வளர்ந்து உள்ள முட்செடிகள் மற்றும் பல்வேறு செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருமாள், சந்தியபாளையம்.
குப்பையால் துர்நாற்றம்
ஈரோடு பூந்துறை ரோடு காமராஜ் நகர் பகுதியில் ரோட்டு ஓரத்தில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது குப்பைகள் பறக்கிறது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி குவிந்து உள்ள குப்பையில் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் இருக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் நடமாடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இந்த குப்பைகளை அள்ள நடவடிக்ைக எடுக்கவேண்டும்.
ரபீக், ஈரோடு.
தூர்வாரப்படுமா?
கோபி தாலுகாவுக்கு உள்பட்ட உடையாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் வீதி உள்ளது. இந்த வீதியில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடை வடிகாலின் ஒரு பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. புதர் மண்டி கிடப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாருவதுடன், செடி, கொடிகள் மற்றும் புதர்களை வெட்டி அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், உடையாம்பாளையம்.
கழிப்பறை பராமரிக்கப்படுமா?
பவானி ஊராட்சி ஒன்றியம் பெரியபுலியூர் முதல் வார்டுக்கு உள்பட்ட சூளைமேடு கிராமத்தில் கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் கழிப்பறையை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் கழிப்பறைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு பழுதடைந்து உள்ளது. இதனால் கழிப்பறை முற்றிலும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பலர் திறந்த வெளி பகுதியையே கழிப்பறையாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கழிப்பறையை முறையாக பராமரிப்பதுடன், ஆழ்துளை கிணற்றையும் சரி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துரைசாமி, சூளைமேடு.
குழந்தைகள் மையம் சீரமைக்கப்படுமா?
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தில் குழந்தைகள் நல மையம் உள்ளது. இந்த மையத்தை சுற்றிலும் முள் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் இந்த கட்டிடமும் முறையான பராமரிப்பின்றி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. குழந்தைகளின் நலன் கருதி கட்டிடத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றவும், கட்டிடத்தை சீரமைத்து கொடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
குருசாமி, செம்புளிச்சாம்பாளையம்.
பஸ்நிறுத்தத்தில் ஆக்கிரமிப்பு
கிளாம்பாடி பேரூராட்சி சோளங்காபாளையம் 1-வது வார்டு பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் மரக்கிளைகளை வெட்டி சாலை ஆக்கிரமிக்கப்பட்டு்ள்ளது. சிலர் காரையும் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் மற்றும் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சோளங்காபாளையம்.