'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்

ஆபத்தான மரங்கள்

திண்டுக்கல்-திருச்சி சாலையில் இருந்து எம்.எம்.கோவிலூர் வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக எம்.காப்பிளியபட்டியில் தொடக்கப்பள்ளி அருகே தோண்டிய பள்ளத்தால் சாலையோரத்தில் நிற்கும் புளியமரங்களில் வேர்கள் சேதமாகிவிட்டன. பலத்த காற்று வீசும் போது மரம் சாய்ந்து விடும் அபாயம் உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சக்திவேல், எம்.காப்பிளியபட்டி.

தெருவிளக்கு வசதி தேவை

திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி 6-வது வார்டு அருணாநகரில் போதிய அளவில் தெருவிளக்கு வசதி இல்லை. இரவில் பல பகுதிகளில் இருளில் மூழ்கி விடுவதால், பொதுமக்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். -சுந்தரராஜன், அருணாநகர்.

வேகத்தடை அவசியம்

பழனி கிரிவீதியில் இருந்து கொடைக்கானல் சாலை பிரியும் இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் நடக்கின்றன. எனவே விபத்தை தடுப்பதற்கு வேகத்தடை அமைப்பது அவசியம். இதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? -அறிவாசான், மானூர்.

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி 2-வது வார்டு வ.உ.சி.நகரில் சாக்கடை கால்வாயில் மண், குப்பைகள் சேர்ந்து அடைத்துவிட்டது. இதனால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். -குமார், கோடாங்கிபட்டி.


Next Story