தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
விபத்து அபாயம்
குளச்சல் நகராட்சிக்குட்பட்ட அண்ணா சாலையின் அருகில் தபால் நிலையம் செல்லும் நடைபாதை உள்ளது. இந்த பாதையில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிலாப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராசிக், குளச்சல்.
சீரமைக்கப்பட்டது
இனயம் புத்தன்துறையில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்து காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையின் மேற்கூரையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
எரியாத மின்விளக்கு
நாகர்கோவில் மாநகராட்சியில் சரக்கல்விளை சானல்கரை பகுதியில் 467 எண் கொண்ட மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர்.
குப்பைகள் அகற்றப்படுமா?
கீழ ஆசாரிபள்ளம் நடுத்தெருவில் மாதா கிணறு அருகில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மூலம் அந்த பகுதி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். தற்போது, இந்த தொட்டியின் கீழ் பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மேலும், செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. எனவே, குப்பைகள், புதர்களை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ஆன்டணி,கீழ ஆசாரிபள்ளம்.
பொதுமக்கள் அவதி
சுவாமியார்மடத்தில் இருந்து வேர்க்கிளம்பி செல்லும் சாலையில் சுவாமியார்மடம் பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இந்த பஸ்நிறுத்தத்துக்கு வந்து செல்கின்றனர். பலர் நிழற்குடையின் அருகில் வைத்து மதுகுடிக்கின்றனர். இதனால், அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நிழற்குடையின் அருகில் மதுகுடிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரெ.வசந்தகுமார், சுவாமியார்மடம்.
வீணாகும் தண்ணீர்
மகராஜபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாடான்குளத்தில் இருந்து ஆமணக்குவிளை வழியாக லீபுரம் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலில் ஆமணக்குவிளை பகுதியில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாகு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திக்கேயன், லீபுரம்.
மின் விளக்கை மாற்ற வேண்டும்
கோட்டாரில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் ஒரு தனியார் வங்கி உள்ளது. இந்த வாங்கியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து சீராக எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சலீம், டி.வி.டி.காலனி.