'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

வேகத்தடை வேண்டும்

சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பனியம்பள்ளி ஊராட்சியில் சென்னிமலை-ஊத்துக்குளி சாலை அருகில் உள்ளது தோப்புபாளையம். இங்குள்ள காலனி பகுதியில் உள்ள சாலையில் மிக அதிகமான வளைவு காணப்படுகிறது. இந்த பகுதியில் அதிகமான விபத்துகளும், உயிரழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.. எனவே விபத்தை தடுக்க இனி வரும் காலங்களில் வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தோப்புபாளையம்.

குண்டும்-குழியுமான சாலை

ஈரோடு சத்தி ரோட்டில் இருந்து பெட்ரோல் பங்க் எதிரே உள்ள ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறாா்கள். மேலும் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு

தேங்கும் கழிவுநீர்

அந்தியூர் திருவள்ளுவர் வீதி அருகில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது முதன்மை வடிகாலுடன் இணைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீா் தங்குதடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோகுல்சங்கர் மோகன்ராஜ், அந்தியூர்

ரோட்டில் சுற்றித்திரியும் ஆடுகள்

சத்தியமங்கலம் அருகே உள்ள டி.ஜி.புதூர் நால்ரோடு பகுதியில் ஆடுகள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே ரோட்டில் சுற்றித்திரியும் ஆடுகளை பிடித்து அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், டி.ஜி.புதூர் நால்ரோடு.

மின்இணைப்பு வேண்டும்

அந்தியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையில் மின் கம்பம் உடைந்து இருந்தது. இதனால் அதன் அருகில் புதிதாக மின் கம்பம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய மின்கம்பத்துக்கு மின்இணைப்பு கொடுக்கவில்லை. எனவே புதிய மின்கம்பத்துக்கு மின்இணைப்பு கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பி.சின்னண்ணன், அந்தியூர்.

குடிநீர் சீராக வினியோகிக்கப்படுமா?

பெருந்துறை பேரூராட்சியில் உள்ள எல்லமேடு முத்து நகர் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு போதிய குடிநீரும் கிடைப்பதில்லை. எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முத்து நகர்.

கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்

ஆப்பக்கூடலில் உள்ள பவானி மெயின் ரோட்டில் காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை வடிகால் செல்கிறது. இந்த சாக்கடை வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையும் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆப்பக்கூடல்.

பாராட்டு

ஈரோடு சூரம்பட்டி அம்பேத்கர் கிழக்கு வீதியில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அம்பேத்கர் கிழக்கு வீதிக்கு வந்து சாக்கடையில் இருந்த அடைப்புகளை அகற்றி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

ஸ்ரீதர், சூரம்பட்டி


Related Tags :
Next Story