'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வர்ணம்பூச வேண்டும்
ஈரோடு வெண்டிபாளையத்தில் இருந்து சோலார் செல்லும் ரோடு மிகவும் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. அந்த ரோட்டில் 3 இடங்களில் வேகத்தடை உள்ளது. அதற்கு வர்ணம் பூசாததால் வேகத்தடை இருப்பதே தெரியவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெண்டிபாளையம் ரோட்டை செப்பனிட்டு, வேகத்தடைக்கு வர்ணம் பூச ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், வெண்டிபாளையம்.
ஆபத்தான குழி
கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் மெயின் வீதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சாிசெய்ய தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. இந்த வழியாக பாதசாரிகளும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளும் சென்று வருகிறாா்கள். எனவே அசம்பாவிதம் சம்பவம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா?
சந்தானம், சோளக்காளிபாளையம்
சீரமைக்கப்படுமா?
பவானிசாகா் காவிலிபாளையம் அருகே பொங்கியானூர் கிராமத்தில் மயானம் உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமாிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தவா்களின் உடல்களை புதைக்க முடியாமல் அவதிப்படுகிறாா்கள். உடனே மயானத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்த அதிகாாிகள் வழிவகை செய்ய வேண்டும்.
பிரவின்குமார் பொன்னுசாமி, பொங்கியானூர்
தேங்கும் கழிவுநீர்
ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அகில்மேடு 7-வது வீதி, ஈரோடு
ரோட்டில் குழி
ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் இருந்து பஸ் நிலையத்துக்கு செல்லும் வளைவில் உள்ள ரோட்டில் குழி விழுந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பஸ்கள் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
ரெயில்வே பாலத்தில் வளரும் செடி
ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. அங்கு கொல்லம்பாளையத்தில் இருந்து ரெயில் நிலையத்துக்கு செல்லும் வழியில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தில் செடிகள் மற்றும் அரசமரம் வளர்ந்து உள்ளது. இதனால் பாலத்துக்கு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த செடியை அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
தாமோதரன், கொல்லம்பாளையம்.
பஸ் முறையாக இயக்க வேண்டும்
சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு மாலை 7.30 மணிக்கு 11ஏ என்ற பஸ்சும், 7.45 மணிக்கு 11 என்ற பஸ்சும் செல்கிறது. இந்த பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. சில சமயங்களில் பஸ்கள் வருவது இல்லை. இதனால் வேலைக்கு சென்று திரும்பும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் சிரமப்படுகிறார்கள். ஆகவே தினமும் இந்த பஸ்களை முறையாக இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.எஸ்.கண்ணன், சென்னிமலை.
பாராட்டு
டி.என்.பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தில் தெருவிளக்கு எரியாமல் இருந்தது. தெரு விளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு்ள்ளது. தற்போது தெருவிளக்கு ஒளிருகிறது. எனவே கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கொண்டையம்பாளையம்