தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.

ராணிப்பேட்டை


புதர் மண்டிய பயணசீட்டு அலுவலக வளாகம்

ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் வடக்குப் பகுதியில் புதிதாக பயணச்சீட்டு புக்கிங் அலுவலகம் கட்டப்பட்டது. அந்தக் கட்டிட பகுதி மற்றும் வளாகத்தின் முன்பக்கம் வைத்திருந்த பூஞ்செடிகள் அந்த இடத்தில் அழிந்து புதர் மண்டி காணப்படுகிறது. சம்தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சுத்தப்படுத்தி முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ் சமூக ஆர்வலர், அரக்கோணம்.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் உள்ள பன்னீர்செல்வம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 240 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்ற ேவண்டிய நிலையில் 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 3 ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன. இதனால் கற்றல் கற்பித்தல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அரசு போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்போது வேறொரு பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் இருந்தால், அவர்களை இந்தப் பள்ளியில் நியமிக்கலாம். கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

-செ.ரவிச்சந்திரன்-தலைமை ஆசிரியர் ஓய்வு, ஆம்பூர்.

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையத்தின் பின்பக்கம் எம்.ஜி.ஆர். சிலை அருகே கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இதனை, ஆரணி நகராட்சி கண்டு கொள்வதே இல்லை. கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை தடுக்க கால்வாய்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-ராகவா லாரன்ஸ், ஆரணி.

ஆபத்தான மரத்தை அகற்றுவார்களா?

கே.வி.குப்பத்தை அடுத்த மகாதேவமலை நுழைவு வாயில் எதிரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி புளியமரம் ஒன்று உள்ளது. அந்த மரம் அரைகுறையாக வெட்டிய நிலையில் ஆபத்தை உணராமல் விடப்பட்டுள்ளது. பயணிகள் மீது விழும் முன் அகற்றப்படுமா?

-மாதவன், கே.வி.குப்பம்.

சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ேவண்டும்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜவீதியில் சாலையின் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலச்சந்திரன், செங்கம்.

மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள்

வேலூர் அண்ணாசாலை ஓரத்தில் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மற்றும் பழக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புற படுத்தி நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மறுதினமே மீண்டும் கடைகளும் சாலை ஓரத்தை ஆக்கிரமித்தன. மீண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை விடுத்து தள்ளுவண்டி கடைகளை அப்புறபடுத்தினர். ஆனால் தற்போது அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி கடைகளும் வாகனங்களும் ஆக்கிரமித்து உள்ளதை படத்தில் காணலாம்.

-மோகன்பாபு, வேலூர்.

பைபாஸ் சாலை கால்வாயில் கொட்டப்படும் கழிவுகள்

வேலூரில் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்காமல் முறையற்ற வகையில் கால்வாய்களில் கொட்டுவது அதிகரித்து வருகிறது. சில வியாபாரிகள், பழ கழிவுகள், கோழி, ஆடு இறைச்சி, காய்கறி கழிவுகளை ஆட்டோக்களில் கொண்டு வந்து ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் கால்வாய்களில் கொட்டுகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் கழிவுகளை, புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் பைபாஸ் சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் ஒருவர் கொட்டுகிறார். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன்தாஸ், வேலூர்.

சாலையை பராமரிக்க வேண்டும்

ஆம்பூர் பை-பாஸ் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. வாணியம்பாடி நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட இந்தச் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் ஓரங்களில் 7 மாதமாக எந்தப் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை. குப்பைகள் நிறைந்து மழைக்காலத்தில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை முறையாக பராமரிக்க வேண்டும்.

-கோபி, ஏ.கஸ்பா ஆம்பூர்.


Related Tags :
Next Story