'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம்

குஜிலியம்பாறை அருகே இலுப்பபட்டியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையோரத்தில் புளியமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இந்த மரம் முறிந்து சாலையின் குறுக்காக விழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு விழும் போது அந்த வழியாக வாகனங்கள் ஏதேனும் சென்றால் அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

-ஸ்டாலின், குஜிலியம்பாறை.

சாக்கடை கால்வாய் வேண்டும்

அகரத்தை அடுத்த கோட்டூர் ஆவரம்பட்டி வடக்குத்தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் கால்வாய் போன்று பொதுமக்களே குழிதோண்டி பயன்படுத்தும் நிலை உள்ளது. தெருவில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே கால்வாய் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

-பிரனேஷ்வர், கோட்டூர் ஆவரம்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

கோபால்பட்டி அருகே மணியக்காரன்பட்டியில் இருந்து சில்வார்பட்டிக்கு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், சில்வார்பட்டி.

வைகை ஆற்றை சூழ்ந்த அமலைச்செடிகள்

தேனியை அடுத்த குன்னூரில் உள்ள வைகை ஆற்றை அமலைச்செடிகள் சூழ்ந்துள்ளன. இதனால் ஆற்றின் நீர்மட்டம் வேகமாக குறைவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் சரியும் அபாயம் உள்ளது. எனவே அமலைச்செடிகளை அகற்ற ேவண்டும்.

-ராஜா, குன்னூர்.


Next Story