தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்.
மருத்துவமனை 24 மணிநேரமும் ெசயல்படுமா?
கண்ணமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இரவில் அவசர, முதலுதவி சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். 24 மணி நேரமும் டாக்டர், நர்சுகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?
-சத்தியசீலன், கண்ணமங்கலம்.
(படம்) சுகாதாரமற்ற முறையில் குடிநீர்தொட்டி, கழிவறை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த சயனபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி, கழிவறை முறையாக பராமரிக்கப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளதால் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தொட்டி, கழிவறைைய பள்ளி நிர்வாகம் முறையாக பராமரிக்குமா?
-செந்தில்குமார், சயனபுரம்.
(படம்) தினத்தந்திக்கு நன்றி
ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு ஆகியவற்றின் நடுவே உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் எரியாமல் இருந்தன. இதுகுறித்து தினத்தந்தியில் புகைப்படத்துடன் செய்தி ெவளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையின் நடுேவ உள்ள மின்விளக்குகளை எரிய விட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி.
-ராகவன், ஆரணி.
(படம்) சமையல் கூட மேற்கூரை சேதம்
சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூட கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் ெவளிேய ெதரிகின்றன. அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-கலியமூர்த்தி, செங்கல்நத்தம்.
(2-படம்) போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பார்களா?
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சுற்று வட்டாரத்தில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனைைய போலீஸ் அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-சீனிவாசன், நெமிலி.
(படம்) சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் மகளிர் சுகாதார வளாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. கட்டிடத்தின் உள்பகுதி சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த மகளிர் சுகாதார வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?
-நரசிம்மன், பாண்டியநல்லூர்.
மின்சார வசதி செய்ய வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டி 3 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை மின்சார வசதி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மின் விசிறி பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே உடனடியாக பள்ளிக்கு மின்சார வசதி செய்ய வேண்டும்.
-சுதாகர், கூத்தம்பாக்கம்.
மின்வாரிய அலுவலகம் ெசல்ல பெயர் பலகை வைக்கப்படுமா?
பேரணாம்பட்டு நகரம் புத்துக்கோவில் சந்திப்பு அருகில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. அங்கு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்கட்டணம் செலுத்த பலர் அங்கு வருகின்றனர். ஆனால், அலுவலகம் ெநடுஞ்சாலையில் இருந்து சற்று உள்ளே இருப்பதால் பலருக்கு வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். நெடுஞ்சாலையையொட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு போகும் என ஒரு பெயர் பலகையை வைத்தால் உதவியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.
(படம்) கழிவறையை திறக்க வேண்டும்
அரக்கோணம் பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள கழிவறை திறக்கப்படாமல் உள்ளது. இதை, இன்னும் திறக்கப்படாமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவறையை விரைவில் திறக்க ேவண்டும்.
-சு.சுந்தரமூர்த்தி, சமூக ஆர்வலர் அரக்கோணம்.
(படம்)
ராணிப்பேட்டை மாவட்டம் விளாபாக்கம் பேரூராட்சி வார்டு எண்:12 புதிய காலணி தொகுப்பு வீடுகள் பகுதியில் பொதுச்சுகாதார வளாகம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அங்குள்ள மக்கள் கழிப்பிடம் செல்ல திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார வளாகத்தை விரைவில் திறக்க வேண்டும்.
-ரா.இளவரசன், விளாபாக்கம்.
(படம்) இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை
வந்தவாசி அருகில் உள்ள ஏம்பலம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அதன் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு வழங்கல் துறை அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
-வக்கீல் சக்திவல், ஏம்பலம்.
சாலையோரம் வீசப்படும் குப்பைகள்
ஆம்பூர் நகரம் மோட்டுக்கொல்லை பகுதியில் சாலையோரம் குப்பைகள் வீசப்படுகிறது. அந்தக் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சரியாக சேகரிப்பது இல்லை. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் அவலம் உள்ளது. நகராட்சி ஊழியர்கள் முறையாக குப்பைகளை அகற்ற வேண்டும்.
-வேணி மாதவன், ஆம்பூர்.