தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.

திருப்பத்தூர்


நடைபாதையில் ஓடும் கழிவுநீர்

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட வீராகுட்டை தெரு பகுதியில் கடந்த ஓரிரு மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மக்கள் செல்லும் நடைபாதையில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால் வாயை தூர்வார வேண்டும்.

-வினோத், திருவண்ணாமலை.

சாலையை சீர் செய்வார்களா?

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள கருமாரியம்மன் கூட்டுச்சாலை பகுதியில் கடந்தசில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. அந்த இடத்தில் பள்ளம் ேதாண்டி குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். ஆனால் அந்தப் பள்ளத்தை சரியாக சீரமைக்கவில்லை. சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைப்பார்களா?

-தாமோதரன், சோளிங்கர்.

மருத்துவமனை 24 மணிநேரமும் ெசயல்பட வேண்டும்

கண்ணமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இரவில் அவசர, முதலுதவி சிகிச்சைக்காக பலர் வருகின்றனர். 24 மணி நேரமும் டாக்டர், நர்சுகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா?

-சத்தியசீலன், கண்ணமங்கலம்.

சமையல் கூட மேற்கூரை சேதம்

சோளிங்கரை அடுத்த செங்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூட கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் ெவளிேய ெதரிகின்றன. அதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.

-கலியமூர்த்தி, செங்கல்நத்தம்.

(2-படம்) போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பார்களா?

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி சுற்று வட்டாரத்தில் கஞ்சா, சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனைைய போலீஸ் அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-சீனிவாசன், நெமிலி.

மின்சார வசதி செய்ய வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் கூத்தம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டி 3 ஆண்டுகளாகிறது. ஆனால் இதுவரை மின்சார வசதி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மின் விசிறி பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே உடனடியாக பள்ளிக்கு மின்சார வசதி செய்ய வேண்டும்.

-சுதாகர், கூத்தம்பாக்கம்.

மின்வாரிய அலுவலகம் ெசல்ல பெயர் பலகை வைக்கப்படுமா?

பேரணாம்பட்டு நகரம் புத்துக்கோவில் சந்திப்பு அருகில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. அங்கு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்கட்டணம் செலுத்த பலர் அங்கு வருகின்றனர். ஆனால், அலுவலகம் ெநடுஞ்சாலையில் இருந்து சற்று உள்ளே இருப்பதால் பலருக்கு வழி தெரியாமல் தடுமாறுகிறார்கள். நெடுஞ்சாலையையொட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு போகும் என ஒரு பெயர் பலகையை வைத்தால் உதவியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

(படம்) இடிந்து விழும் நிலையில் ரேஷன் கடை

வந்தவாசி அருகில் உள்ள ஏம்பலம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அதன் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தை இடித்து விட்டு வழங்கல் துறை அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

-வக்கீல் சக்திேவல், ஏம்பலம்.

(படம்) சாலை பணியை தொடங்குவார்களா?

சோளிங்கர் தாலுகா பாணாவரத்தில் போலீஸ் லைன் தெரு சாலையை சீர் செய்ய எம்.சாண்ட் மற்றும் மணல், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. அவைகள் கொட்டி பல மாதங்கள் ஆகி விட்டது. ஆனால், அங்குப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தெரு சாலை பணியை விரைவில் தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுரேஷ், பாணாவரம்.

சிறுமின்விசை தொட்டியில் குடிநீர் நிரப்புவார்களா?

ேசத்துப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட வந்தவாசி சாலையில் பழம்ேபட்டை பிள்ளையார் கோவில் அருகில் ஒரு சிறுமின்விசை ெதாட்டி உள்ளது. அதில் பல மாதங்களாகக் குடிநீர் நிரப்பப்படாமல் காட்சி பொருளாகவே வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிறு மின்விசை தொட்டியில் குடிநீர் நிரப்புமா?

-அசோக்குமார், சேத்துப்பட்டு.


Related Tags :
Next Story