தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.

ராணிப்பேட்டை



அங்கன்வாடி கட்டிடம் பழுது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றியம் பச்சூர் ஊராட்சி மேல்பச்சூர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அந்த அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்துள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்தைச் சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-செண்பகராஜ், நாட்டறம்பள்ளி.

மின்கம்பம் பழுது

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் கொட்டாற்று பாலம் அருகில் சாத்கர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மின்கம்பம் பழுதடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்வாரியத்துறையினர் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஒன்றில் நீண்ட நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. அங்கு வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

-பா.சிவா, ஆற்காடு.

நாய்கள் தொல்லை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அதில் 24-வது வார்டில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. சாலையில் செல்லும் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகளை தெருநாய்கள் கடிக்க பாய்கின்றன. வந்தவாசி காந்தி சாலை, பஜார் சாலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதியில் நாய்கள் கும்பல் கும்பலாக சுற்றுகின்றன. நாய்கள் தொல்லையை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கார்த்திகேயன், வந்தவாசி.

சாலையில் தேங்கும் குடிநீர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பின்பக்கம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் அதிக அளவில் தேங்குகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீணாக வெளியேறும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், வேலூர்.


Related Tags :
Next Story