'தினத்தந்தி' செய்தி எதிரொலி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கும்பகோணத்தில் டாக்டர் ஜாகிர் உசேன் தெருவில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கும்பகோணத்தில் டாக்டர் ஜாகிர் உசேன் தெருவில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
சிமெண்டு கற்கள்
கும்பகோணம் மாநகராட்சியில் புதிய பஸ்நிலையம் அருகே டாக்டர் ஜாகிர் உசேன் தெரு உள்ளது. இந்த பகுதியின் அருகே ஏராளமான நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன.
இந்த தெருவை அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு - தனியார் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தெருவில் சாலையின் குறுக்கே சிமெண்டு கற்கள், மணல், கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன.
புதிய தார்ச்சாலை
இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். ஜல்லிக்கற்கள் சிதறிக்கிடப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவமும் நடந்தது. இந்த தெருவிற்கு செல்லும் சாலையின் குறுக்கே கிடக்கும் கருங்கல் ஜல்லியால் அடிக்கடி மாணவர்கள் விபத்துக்குள்ளாகினர்.தெருவிற்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை நிலவி வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் மேற்கண்ட தெருவில் கிடந்த கட்டுமான கழிவுகளை அகற்றியதோடு புதிய தார்ச்சாலையை அமைத்துள்ளனர். செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.