பருப்பு மில் உரிமையாளர் தற்கொலை
பருப்பு மில் உரிமையாளர் தற்கொலை
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளன. இவர் கட்டங்குடி சாலையில் பருப்பு மில் வைத்துள்ளார்.. இவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த விஜயராகவன் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்திற்கு மல்லி வாங்கியதாகவும், அதற்கான தொகையான ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்திற்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கு காசோலையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயராகவன், காசோலையில் கூடுதலாக ரூ.11 லட்சத்து 27 ஆயிரம் சேர்த்தது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயராகவன், சங்கரை சந்தித்து தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சங்கர் நேற்று முன்தினம் தனது பருப்பு மில்லில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து மனைவி மோகனப்பிரியா அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.