உப்பாறு ஓடையின் குறுக்கேமேம்பாலம் கட்டப்படுமா?


உப்பாறு ஓடையின் குறுக்கேமேம்பாலம் கட்டப்படுமா?
x
திருப்பூர்


ஆமந்தகடவு அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உப்பாறு ஓடை

குடிமங்கலம் ஒன்றியத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. உப்பாறு ஓடைவழியாக செல்லும் தண்ணீர் இறுதியாகஉப்பாறு அணைக்கு செல்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுகிறது. குடிமங்கலம் பகுதியில் மழைக்காலங்களில் உப்பாறு ஓடையில் தண்ணீர் அதிகளவு செல்கிறது. ஆமந்தகடவில் இருந்து அம்மாபட்டி செல்லும் சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. குடிமங்கலம் பகுதியில் தொடர் மழை, பருவமழை காலங்களில் தரைமட்ட பாலத்தை கடந்து தண்ணீர் செல்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

உயர்மட்ட பாலம்

குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த பொருட்களையும், விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களையும் பாலத்தின் வழியாக கொண்டு செல்வதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தரைப்பாலத்தில் பாதுகாப்பு சுவர் எதுவும் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதனால் கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் மழைக்காலங்களில் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் தரை பாலத்தை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே ஆமந்தகடவு அருகே உள்ள தரைமட்ட பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story