சேதமடைந்த வேளாண்மை களம் சீரமைக்கப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த வேளாண்மை களம் சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிா்பாா்த்து உள்ளனர்.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த வேளாண்மை களம் சீரமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிா்பாா்த்து உள்ளனர்.
வேளாண்மை களம்
கூத்தாநல்லூர் அருகே சேகரை கிராமத்தில் உள்ள, மிளகுகுளம் தெரு அருகில் வயலையொட்டி அப்பகுதி விவசாயிகள் பயன்பாட்டுக்கு சிமெண்ட் வேளாண்மை களம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கரில் நெல், உளுந்து, பயறு போன்ற பயிர்கள் சாகுபடி செய்த பிறகு, அவற்றை அந்த வேளாண்மை களத்தில் வைத்து உலர்த்திய பிறகு, நெல், உளுந்து, பயறுகளை மூட்டைகளாக கட்டுவார்கள். இதனால், அந்த வேளாண்மை களம் அறுவடை காலங்களில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
சீரமைக்க கோரிக்கை
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த வேளாண்மை களத்தின் முகப்பில் மணல் அள்ளப்பட்டது. இதனால் அந்த இடத்தை சுற்றிலும் மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. மேலும், அந்த பள்ளத்தில் தற்ேபாது மழைநீரும் தேங்கி நிற்கிறது.பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், சேதமடைந்த வேளாண்மை களம் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளது. எனவே, நடப்பாண்டு அறுவடை பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளத்தை மணல் கொட்டி மேடாக்கி, சேதமடைந்த வேளாண்மை களத்தை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.