பெரும்பாறை அருகே மலைப்பாதையில் தடுப்புச்சுவர் இடிந்து சேதம்
பெரும்பாறை அருகே மலைப்பாதையில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
திண்டுக்கல்
பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் இன்று பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் மலைப்பாதையில் உள்ள பெரும்பாறை அருகே மீனாட்சி ஊத்து பகுதியில் மலைப்பாதையில் தடுப்பு சுவர் சேதம் அடைந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் அந்த பகுதியில் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story