சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
மாவட்ட ஊராட்சி கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாந்தி:- மாளிகை மேடு பகுதியில் ராஜன்வாய்க்கால் பாலம் கட்டவேண்டும்.பன்னீர்செல்வம்:- உறுப்பினர் பகுதிகளில் நடக்கும் சாலை பணிகளின் போது உறுப்பினர்களிடம் பணிகளுக்கான செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தொகுதிக்கான நிதியை கூடுதலாக அனுமதிக்கவேண்டும்.சுஜாதா:- பஸ் நிறுத்தங்கள் அமைக்கவேண்டும். சாலைகளை சீரமைக்கவேண்டும். மாவட்ட ஊராட்சி சார்பில் சமுதாய நலகூடங்கள் அமைக்க வேண்டும்.
பள்ளிக்கட்டிடங்கள்
கலைவாணி:- பலஆண்டுகளாக தூர்வாரப்படாத ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் உள்ளது. அவர்களுக்கு உடனே வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமயந்தி:- சேதமடைந்துள்ள பள்ளிக்கட்டிடங்களை சீரமைத்து தரவேண்டும். மேலும் பள்ளிகளுக்கு தேவையான இருக்கைகள், மேஜைகள் வழங்க வேண்டும். சுடுகாட்டுக்கு செல்லும் சாலைகள் சீரமைத்து கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மாவட்ட ஊராட்சி தலைவர்: மயான கொட்டகை, சாலை சீரமைப்பு போன்ற பணிகள் நிதி ஆதராங்களை கொண்டு நிறைவேற்றி தரப்படும். தமிழகத்திலேயே திருவாரூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான உரங்கள், விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் உறுப்பினர் விடுத்துள்ள கோரிக்கைகள் முடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினாா்.