காடுவாகுடி பாசன மதகு சீரமைக்கப்படுமா?
கோட்டூர் அருகே முள்ளியாற்றில் காடுவாகுடி பாசன மதகு சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே முள்ளியாற்றில் காடுவாகுடி பாசன மதகு சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
விளைநிலங்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருப்பத்தூரில் முள்ளியாற்றில் இருந்து பிரிந்து காடுவாகுடி பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்கால்கள் மூலம் வேலைக்காநல்லூர், திருப்பத்தூர், காடுவாகுடி, காடுவாகொத்தமங்கலம், அத்தியடி போன்ற கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த வாய்க்கால் தலைப்பில் முள்ளியாற்றில் கட்டப்பட்டுள்ள மதகு மிக மோசமான நிலையில் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது.
மதகை சீரமைக்க கோரிக்கை
மேலும் மதகு ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்க கூடிய அளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பாசன மதகை நேரில் பார்வையிட்டு மதகை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.