நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1½ டன் நெல் மூட்டைகள் சேதம்


நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1½ டன் நெல் மூட்டைகள் சேதம்
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 1½ டன் நெல் மூட்டைகள் சேதமடைந்தது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் ஒன்றியம் எடுத்தனூர் கிராமத்தில் திறந்தவெளியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் செய்யப்பட உள்ள நெல்மூட்டைகள் தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக மூட்டையின் மேற்பகுதி தார்ப்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடுத்தனூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1½ டன் நெல் மூட்டைகள் நனைந்துள்ளன. மேலும் மூட்டையில் உள்ள நெல் ஈரப்பதமாகவே இருப்பதால் நெல்கள் முளைக்க தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் வாணாபுரத்தில் வாணாபுரத்தில் ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலக வளாகத்தில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் குடோன் மற்றும் தானியக்களம் வசதியுடன் கூடிய நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story