ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைகள் சேதம்:விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை


ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைகள் சேதம்:விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 5:05 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே வாழைகள் சேதம் அடைந்துள்ளதால், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், எனது தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னன்குறிச்சி மற்றும் சுப்பிரமணியபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 13-ந் தேதி உயர் அழுத்த மின்கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீபத்தில் சுமார் 60 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் அரசு உடனடியாக வழங்க ஆவண செய்யவேண்டும், என கூறியுள்ளார்.


Next Story