மீன்பிடிதுறைமுகத்தில் கடல் சீற்றத்தால் அலை தடுப்புச்சுவர் சேதம்


மீன்பிடிதுறைமுகத்தில் கடல் சீற்றத்தால் அலை தடுப்புச்சுவர் சேதம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி மீன்பிடிதுறைமுகத்தில் கடல் சீற்றத்தால் அலை தடுப்புச்சுவர் சேதம் அடைந்தது

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக அலை தடுப்பு சுவர் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட அம்பன் புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரூ.190 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயலால் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு அலை தடுப்புச்சுவரில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கருங்கற்களால் ஆன தடுப்பு சுவரில் அலை மோதிய வேகத்தில் கருங்கல்லில் சரிவு ஏற்பட்டு சமதளத்தில் இருந்த கான்கிரீட் பாதை சில இடங்களில் லேசாக உள்வாங்கியுள்ளது. சேதம் அடைந்த அலை தடுப்பு சுவரை தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என்று ் தரங்கம்பாடி தலைமை கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story