தீவிபத்தில் ரூ.1½ லட்சம் பொருட்கள் சேதம்
சங்கராபுரத்தில் நடந்த தீவிபத்தில் ரூ.1½ லட்சம் பொருட்கள் சேதமடைந்தது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் பேரூராட்சி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி முத்துலட்சுமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றார்.இந்த நிலையில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை எரிந்து நாசமானது. சேதமதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story