தீ விபத்தில் எந்திரங்கள் சேதம்


தீ விபத்தில் எந்திரங்கள் சேதம்
x

தீ விபத்தில் எந்திரங்கள் சேதம் அடைந்தன

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி ரெயில்வே கேட் அடுத்து பரப்பாடி செல்லும்ரோடு அருகிலுள்ள அனுசியா நகரில் தனியாருக்கு சொந்தமான தென்னை நாரில் இருந்து உற்பத்தி செய்த பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் உள்ளது. அதில் நேற்று மாலை தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் இரவு 10 மணி வரை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது தீ விபத்திற்கான காரணம் குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story