மழையினால் நெற்பயிர் மூழ்கி சேதம்


மழையினால் நெற்பயிர் மூழ்கி சேதம்
x

பேரணாம்பட்டு அருகே மழையினால் நெற்பயிர் மூழ்கி சேதமடைந்தன.

வேலூர்

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2 நாட்களாக சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நெடுஞ்சாலையில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன.

இந்த மழையினால் பேரணாம்பட்டு அருகே ஏரிக்குத்தி கிராமத்தில் கன்னையன் என்பவருடைய விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரில் மழைநீர் புகுந்ததலால் 1 ஏக்கர் நெற்பயிர் மூழ்கி சேதமடைந்தது.

இதுகுறித்து ஏரிக்குத்தி கிராம நிர்வாக அலுவலர் அருண் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.


Next Story