சுற்றுலா பஸ் மோதி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் சேதம்


சுற்றுலா பஸ் மோதி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் சேதம்
x

சுற்றுலா பஸ் மோதி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் சேதம்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு நேற்று கர்நாடகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு பஸ்சில் சுற்றுலா வந்தனர். அந்த பஸ் சுற்றுலா பயணிகளை ஒரு தங்கும் விடுதியில் இறக்கிவிட்டு இரவு பார்க்கிங் செய்வதற்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு செல்லும் நுழைவுவாயில் வழியாக சென்றது. அப்போது பஸ்சின் மேல் பகுதி நுழைவாயிலில் மோதியது. இதில் நுழைவாயிலும், பஸ்சின் மேற்கூரையும் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story