சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்


சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும்
x

கண்டிரமாணிக்கம், பிலாவடி, 18 புதுக்குடி ஊராட்சிகளில் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என குடவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குடவாசல்:

கண்டிரமாணிக்கம், பிலாவடி, 18 புதுக்குடி ஊராட்சிகளில் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும் என குடவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

குடவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் கிளாரா செந்தில் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்ட அறிக்கையை ஒன்றிய மேலாளர் ராஜா வாசித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

அர்ஜுனன் (அ.தி.மு.க.):- கண்டிரமாணிக்கம், பிலாவடி, 18 புதுக்குடி ஆகிய ஊராட்சிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொகுப்பு வீடுகள் சீரமைக்கப்படும்

பாஸ்கர்(வட்டார வளர்ச்சி அலுவலர்):- தொகுப்பு வீடுகள் பழுது நீக்கம் செய்ய எம்.எல்.ஏ., எம்.பி.களை அணுகி போதிய நிதி பெற்று பழுது சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரமா(அ.தி.மு.க.):- வயலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 100 நாள் வேலை கிடைக்க வேண்டிய நிலையில் 25 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. 100 நாள் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிளாராசெந்தில்(தலைவர்):- இதுதொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணிகள் ஒதுக்கவில்லை

தியாகராஜன்(த.மா.கா):- குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் ரூ.50 லட்சம் வரை ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறுகிறது.

இதில் ஆளும் கட்சிக்கு 70 சதவீதமும், எதிர்க்கட்சிகளுக்கு 30 சதவீதமும் என பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்களுக்கு எந்த பணியையும் ஒதுக்கவில்லை.

பஸ் இயக்க வேண்டும்

திருவாரூரில் இருந்து திருவிடச்சேரி, கண்டிரமாணிக்கம், புதுக்குடி வழியாக கும்பகோணம் வரை சென்று வந்த அரசு பஸ் ஒரு ஆண்டுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனால் செம்மங்குடி, எரவாஞ்சேரி, குடவாசல், திருவாரூர் ஆகிய ஊர்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே மீண்டும் அந்த பஸ்சை இயக்க வேண்டும். இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றி அரசு போக்குவரத்துக்கழக மேலாளருக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் உறுப்பினர்கள் மணிகண்டன், உஷாராணி, உஷாராணி, கோபி, ராஜேஸ்வரி, பிரபாவதி, மகேந்திரன், மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை விளக்கி பேசினர


Next Story