ஸ்ரீவைகுண்டத்தில் வாகனங்களை சேதப்படுத்தி வன்முறை; 4 பேர் கைது
ஸ்ரீவைகுண்டத்தில் வாகனங்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தியதுடன், குடிசை வீட்டுக்கும் தீவைத்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் வன்முறை
ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் பிச்சனார்தோப்பு, கே.டி.கே.நகர், பண்டாரத்தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள்களை கும்பல் ஒன்று சேதப்படுத்தியது. மேலும் அப்பகுதியில் இருந்த ஒரு சமுதாய கொடியும், அருகில் இருந்த ஒரு குடிசைவீீடு ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டது. அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த கும்பல் மேலகோட்டைவாசல்தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 2 கார்களின் கண்ணாடிகளை அரிவாளால் வெட்டி உடைத்ததுடன், சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் லோடு ஆட்டோவையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ெசன்றது. இந்த வன்முறை சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாமுராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
இதில், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது ஸ்ரீவைகுண்டம் வடக்கு மாடத்தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் கருப்பசாமி என்ற கருப்பன் (வயது 20), கீழ சன்னதி தெருவைச் சேர்ந்த 18 வயது வாலிபர், கீழ அரசாழ்வார் கோவில் தெருவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அரசாழ்வார் கோவில் தெருவைச் சேர்ந்த 17 வயது வாலிபர் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.
இந்த 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில், கே.டி.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 தனித்தனி குழுவாக குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு கடந்த 4-ந்தேதி சென்றனர். அங்கு வைத்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் ஊருக்கு வந்ததும் நள்ளிரவில் இந்த 4 பேரும் வன்முறை ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.