3 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது


3 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 3 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.

தர்மபுரி

தென்மேற்கு பருவமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 3 அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.

தென்மேற்கு பருவமழை

தர்மபுரி மாவட்டத்தின் வழியாக வளம் குளிக்கும் இரண்டு முக்கிய நதிகள் ஓடியும் இந்த மாவட்டத்தில் குடிநீருக்கு பல நேரங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும். மேலும் வானம் பார்த்த பூமியாக விவசாயிகள் பெரும் வேதனையில் சிக்கி தவிப்பர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் உள்ள கேசர்குழி அணை, நாகாவதி அணை, தொப்பையாறு அணை, வாணியாறு அணை, வரட்டாறு அணை, தும்பலஅள்ளி அணை ஆகிய 6 அணைகளும் சுமார் 90 சதவீதம் நிரம்பி உள்ளது. இதேபோல் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, நாகாவதி அணை, கே.ஈச்சம்பாடி அணை ஆகிய 3 அணைகளும் முழு கொள்ளளவை ஏட்டி உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அணைகள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை நிரம்பாத ஏரிகளை கணக்கெடுத்து அந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை தூர் வரவேண்டும். ஏரிகள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஏற்கனவே பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் தற்போது பெய்ய இருக்கும் வடகிழக்கு பருவ மழையால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story