பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா நடந்தது
தஞ்சாவூர்
பாபநாசம்;
பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி 3-வது நாள் நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா சக்திவேல் நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கி பரதநாட்டிய கலைஞர்களுக்கு கேடயம் வழங்கினார். நாட்டியாஞ்சலி விழாவில் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புதுடெல்லி, ஆகிய நகரங்களில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா, வியட்னாம், அபுதாபி, ஆகிய நாடுகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு மோகினி ஆட்டம், குச்சுப்பிடி, கதக், உள்பட பல்வேறு நடனங்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story